பழனி பகுதியை குப்பை மேடாக வைத்திருக்கிறது திமுக அரசு என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இன்றைய தினம், குன்றெல்லாம் அருளும் முருகப்பெருமான் ஆண்டியாகவும், அரசனாகவும் அருள்பாலிக்கும் பழனி சட்டப்பேரவைத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
ஆண்டிற்கு ரூ.200 கோடி வருமானம் ஈட்டும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,500 கோடி. இருந்தும், பழனி பகுதியை மேம்படுத்தாமல், குப்பை மேடாக வைத்திருக்கிறது திமுக அரசு. தூய்மையான நகரங்கள் பட்டியலில் 585வது இடத்தில் பழனி இருப்பது வேதனைக்குரியது.
தமிழகத்தில் உள்ள ஊழல் குடும்பங்கள் பட்டியலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு பிறகு, ஐ.பெரியசாமியின் குடும்பம் இருக்கிறது. வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர். எப்போது வேண்டுமானாலும் சிறைக்கு செல்லும் பயத்தில் இருவரும் இருக்கிறார்கள்.
விலைபோகாத மாட்டை வெளிசந்தைக்கு தள்ளி விடுவது போல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை திமுக, பழனிக்கு அனுப்பியுள்ளது. அவர்களுக்கு படுதோல்வியை பரிசளிக்க பழனி மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
கந்தன் அருளும் பழனியின் பெருமையை மீட்டெடுக்கவும், தமிழகத்தில் ஆன்மீக பெருமையை மீட்டெடுக்கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வெற்றி வேட்பாளர் ரவி மனோகரனை பழனி மக்கள் மகத்தான வெற்றி பெற செய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லட்டும்! பழனியின் பெருமை மீளட்டும்! இவ்வாறு குறிப்பிட்ள்ளார்.
Summary
Former BJP leader Annamalai has said that the DMK government is keeping the Palani area as a garbage dump.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை
திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையும்: அண்ணாமலை விளக்கம்
திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்; அதனால்தான் வரவில்லை: அண்ணாமலை

திமுகவின் தோல்வி கோவையில் ஆரம்பித்து சேப்பாக்கம் வரை தொடரும்! அண்ணாமலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


