சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்குச் சொந்தமான சொத்து மதிப்புகள் குறைந்திருப்பது அவர்களது பிரமாணப் பத்திரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
அதாவது, 2026ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில், மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் கடந்த 2021ஆம் ஆண்டைக் காட்டிலும், அவரது சொத்து மதிப்பு ரூ.7.2 கோடியிலிருந்து ரூ.6.2 கோடியாக குறைந்துள்ளது. அதுபோல, அவரது மகனும் துணை முதல்வருமான உதயநிதியின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 25 சதவிகிதம் குறைந்துள்ளது.
சென்னையில் உள்ள அஞ்சுகம் பப்ளிகேஷன் நிறுவனத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால், முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதுபோல, துணை முதல்வர் உதயநிதியின் சொத்து மதிப்புகள் சரிந்ததற்கு, ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறியது காரணமாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராக தற்போது உதயிநிதி மகன் உள்ளார்.
எனவே, மிக முக்கிய நிறுவனங்களிலிருந்து இவர்கள் வெளியேறியதே, கடந்த ஐந்து ஆண்டுகளில் இவர்களது சொத்து மதிப்பு சரிந்ததற்கான காரணமாகக் கூறப்படுகிறது.
அதுபோல, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சொந்தமாக ஒரு காரும் இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது பெயரில் தனக்காக எந்தவொரு தங்க நகையும் அவர் வைத்திருக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு அசையும் சொத்து ரூ.3.30 கோடியும், அசையாச் சொத்து ரூ.4.33 கோடியும் உள்ளதாக அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். இந்நிலையில் 2026 தேர்தலிலும் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்த போது, அவரது கையில் ரொக்கக் கையிருப்பாக ரூ.10 ஆயிரம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரமாணப் பத்திரத்தில் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.20.64 கோடி என்றும், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.12.92 கோடி, அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ.7.72 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி பெயரில் உளுந்தையில் 10.5 ஏக்கர் வேளாண் நிலம் மற்றும் ரூ.1 கோடி மதிப்புள்ள டிஃபென்டர் கார், ரூ.23 லட்சம் மதிப்புள்ள இன்னோவா கார் உள்ளது என்றும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Summary
What, have the asset values of Stalin and Udhayanidhi decreased in five years?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லால்குடி அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ. 6,000 கோடி: உதயநிதி ஸ்டாலின்
தில்லியின் அடிமை இபிஎஸ்: உதயநிதி கடும் தாக்கு
தமிழ்நாட்டுக்கும் தில்லிக்கும் இடையிலான தேர்தல்: உதயநிதி
மக்களிடம் மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்பேன்; திமுக தொடர்ந்து 2-ம் முறை ஆட்சியமைக்கும்: உதயநிதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



