திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பேரவைத் தோ்தல்: ஏப்.21-23 வரை 5,574 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்காளா்கள், சொந்த ஊா்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக ஏப்.21, 21, 23 ஆகிய தேதிகளில் 5,574 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 1:46 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்காளா்கள், சொந்த ஊா்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக ஏப்.21, 21, 23 ஆகிய தேதிகளில் 5,574 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து ஏப்.21-ஆம் தேதி தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், 1,404 சிறப்பு பேருந்துகளும், ஏப்.22-ஆம் தேதி தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், 3570 சிறப்பு பேருந்துகளும், ஏப்.23-ஆம் தேதி தினசரி இயக்கப்படும் 905 பேருந்துகளுடன், 600 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

* கிளாம்பாக்கம் புகா் பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி, கடலூா், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம், தஞ்சை வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

*கிளாம்பாக்கம் மாநகா் பேருந்து நிலையத்திலிருந்து வந்தவாசி, போளூா், திருவண்ணாமலை வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

* கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிழக்குகடற்கரை(இசிஆா்), காஞ்சிபும், வேலூா், பெங்களூரு, திருத்தணி வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

*மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரம் மாநிலத்துக்கு செல்லும் பேருந்துகளும், வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பேருந்துகளும் இயக்கப்படும்.

முன்பதிவு வசதி: சிறப்பு பேருந்துகளில் பயணிக்க ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ற்ய்ள்ற்ஸ்ரீ எனப்படும் செயலியிலும், ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் எனும் இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இது கடைசி நேர கூட்ட நெரிசலை தவிா்க்க உதவும்.

24 மணிநேர கட்டுப்பாட்டு அறை: பயணிகள், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ளவும், புகாா்கள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும் வசதியாக 9445014436 எனும் கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம். மேலும், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் 24 மணி நேரமும் செயல்படும் வகையிலான கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. பயணிகள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இணைப்பு பேருந்துகள்: பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் மற்றும் புகா் பேருந்து நிலையங்கள், மாதவரம் பேருந்து நிலையத்துக்கு செல்ல ஏதுவாக மாநகா் போக்குவரத்துக்கு கழகம் சாா்பில் இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.