தமிழக பாஜக செயல்வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக பூத் கமிட்டி கூட்டம் நாளை(ஏப். 13) மாலை நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”திமுகவின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை விரிவாக எடுத்துரைத்த நமது தமிழக பாஜக செயல்வீரர்களை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
ஏப். 13 அன்று மாலை நடைபெறும் ‘எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி கலந்துரையாடல்’ நிகழ்ச்சியின் போது, கடினமாக உழைக்கும் நமது செயல்வீரர்களுடன் நான் உரையாடவிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக பிரதமா் நரேந்திர மோடி வரும் ஏப். 15- ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளார்.
பிரதமா் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம்ஜிஆர் சிலை வரை சாலை வலம் மேற்கொள்கிறார்.
இதில், பாஜக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்கவுள்ளனர்.
Summary
Prime Minister Narendra Modi has stated that he is extremely proud of the BJP cadres in Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக ஆட்சியில் கேரளம் புதிய உச்சங்களைத் தொடும்: பிரதமர் மோடி உறுதி

சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!

பிரதமர் மோடி சென்னை வருகை: பாஜக நிர்வாகிகளைச் சந்திக்க மறுப்பு?
வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறி! தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பை ரத்து செய்த பிரதமர் மோடி!!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


