மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறி! தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பை ரத்து செய்த பிரதமர் மோடி!!

வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறி நீடிப்பதால் தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பை ரத்து செய்த பிரதமர் மோடி!!

News image

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடியின் ஆலோசனைக் கூட்டம் ரத்து - ANI

Updated On :2 ஏப்ரல் 2026, 6:38 am

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கான வேட்பாளர்கள் இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில், தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிளருக்கிறது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக சென்னையில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவைத் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் ஏப். 4-ஆம் தேதி நடைபெறவிருந்தது. இதில் 150க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்று, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திடீரென கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ளார் தனியார் நட்சத்திர விடுதியில், ஏப்ரல் 4-ஆம் தேதி காலை 11 மணியளவில் பாஜக சாா்பில் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் பேசுவார் என்றும், அதன் பிறகு சென்னையில் நடைபெறும் தோ்தல் பிரசாரத்திலும் பிரதமா் மோடி பங்கேற்பாா் என்று காவல் துறையினா் தெரிவித்திருந்தனர். கிண்டியில் நாளை மறுநாள் நடைபெறவிருந்த இந்தக் கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் 150 பேருடன் பரிதமர் மோடி ஆலோசனை நடத்த இருந்தார் என்றும் கூறப்பட்டது.

தற்போது, அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, தமிழக பாஜகவின் உயர்நிலை தலைவர்கள் ஒரு சிலரை மட்டும் மோடி சந்தித்துப் பேசவிருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக பிரதமர் மோடி, ஏப். 3-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகிறாா். இதற்காக அவா், அன்றைய தினம் புது தில்லியில் இருந்து நண்பகல் 12.35 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு மாலை 3.20 மணிக்கு வருகிறாா். பின்னா், ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரி செல்கிறாா்.

அங்கு பிரசாரத்தில் பங்கேற்றுவிட்டு மாலை 5.50 மணியளவில் ஹெலிகாப்டரில் சென்னைக்கு புறப்படுகிறாா். ஏப். 4ஆம் தேதி சென்னையில் பாஜக நிர்வாகிகள் ஒரு சிலரை சந்தித்துப் பேசவிருக்கிறார். பாஜக வேட்பாளர்கள் இன்னமும் அறிவிக்கப்படாததால் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Prime Minister Modi cancels meeting of Tamil Nadu BJP executives due to delay in candidate announcement!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.