தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கிருஷ்ணகிரி தொகுதியிலும், மகள் வித்யாராணி மேட்டூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
1990ஆம் ஆண்டுகளில், சந்தனக் கட்டை கடத்தலில் ஈடுபட்டு, காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த சந்தன கடத்தல் வீரப்பன், 2004ஆம் ஆண்டு, அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் மீது கொலை, கடத்தல் என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
வீரப்பன் சுட்டுக் கொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. தற்போது, அவரது மனைவியும், மகளும் அரசியல் களத்தில் இருக்கிறார்கள்.
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, கிருஷ்ணகிரி தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் 2006ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு அரசியலுக்குள் நுழைந்தார். தற்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளராக களம் கண்டுள்ளார். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
வீரப்பனின் மகள் வழக்குரைஞர் வித்யாராணி (36), தற்போது நாம் தமிழர் கட்சி சார்பில் மேட்டூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டிருக்கிறார்.
முத்துலட்சுமி, வித்யாராணி இருவருமே தேர்தலுக்குப் புதுமுகங்கள் இல்லை. இவர்களுக்கு ஒரு சில கிராமங்களின் மக்கள் ஆதரவும் உள்ளது என்று அவர்கள் போட்டியிடும் கட்சிகள் சார்பில் கூறப்படுகிறது.
Summary
Veerappan's wife and daughter contesting the TN Assembly elections
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!

தேர்தலில் போட்டியிடும் நடிகர்கள்!
மேட்டூர் தொகுதியில் வீரப்பன் மகள் வித்யாராணி வேட்பு மனு தாக்கல்

புதுச்சேரி தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



