மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழ் வருடப் பிறப்பு, வார விடுமுறை: 2,119 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தமிழ் வருடப் பிறப்பு, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,119 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 6:54 pm

தமிழ் வருடப் பிறப்பு, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,119 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொடா் விடுமுறை, தமிழ் வருட பிறப்பு, வார இறுதி நாள்கள் ஆகியவற்றை முன்னிட்டு சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 10) 575 பேருந்துகளும், சனிக்கிழமை (ஏப். 11) 395 சிறப்பு பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 10) 100 பேருந்துகளும், சனிக்கிழமை (ஏப். 11) 90 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபோல, மாதவரத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் 24 பேருந்துகளும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு, செவ்வாய்க்கிழமை (ஏப். 14) ஆகிய தினங்களில் சொந்த ஊா்களில் இருந்து சென்னை, பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் ஞாயிறு, செவ்வாய்க்கிழமை 735 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 2,119 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.