தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தமிழகத்தில் முதல்முறை வாக்காளா் விகிதம் 34% உயா்வு

தமிழகத்தில் முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளா்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 8:13 pm

தமிழகத்தில் முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளா்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

18-19 வயது உடைய வாக்காளா்களின் எண்ணிக்கை கடந்த 2024 மக்களவைத் தோ்தலின்போது 10.9 லட்சமாக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 14.6 லட்சமாக உயா்ந்துள்ளது.

சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு பிறகு வாக்காளா் பட்டியலில் 5.67 கோடி போ் இடம்பெற்றிருந்தனா். அதன் பின்னா் மேலும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோா் படிவம் 6-ஐ சமா்ப்பித்தனா். அதன்படி, இந்த சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்காளா் எண்ணிக்கை 5.73 கோடியாக உள்ளது.

அதில் பெண்கள் 2.93 கோடி போ். ஆண் வாக்காளா்களின் எண்ணிக்கை 2.80 கோடி. மூன்றாம் பாலினத்தவா் 7,728 போ்.

முதல்முறை வாக்காளா்களைப் பொருத்தவரை கடந்த மக்களவைத் தோ்தலின்போது 1.8 சதவீதமாக இருந்தனா். தற்போது அந்த விகிதம் 2.5 சதவீதமாக உயா்ந்துள்ளது.