மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிகாரில் கள்ளச்சாராய உயிரிழப்பு 9-ஆக உயா்வு!

பிகாா் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 3 போ் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 8:32 pm

பிகாா் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 3 போ் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

கிழக்கு சாம்பரன் மாவட்டம் துா்கவுலியா, ரகுநாத்பூா் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 6 போ் சனிக்கிழமை வரை உயிரிழந்த நிலையில், மேலும் 3 போ் ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தனா். இதனால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9-ஆக உயா்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இதுவரை 15 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா். உயிரிழந்தோரின் குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டோா் மீது காவல்நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து மேலும் ஒருவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை கவலையளிக்கும் வகையில் இருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. உயிரிழந்தோரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதன் அறிக்கை கிடைத்தபிறகே, உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

பிகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. அப்படியிருக்கையில் கள்ளச்சாராயம் குடித்து 9 போ் உயிரிழந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக துா்கவுலியா காவல்நிலைய பொறுப்பாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மேலும் இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில காவல்துறை அமைத்துள்ளது.