மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

செந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!

கொங்கு மண்டலத்தில் நட்சத்திர வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் ஏற்பு

News image

செந்தில் பாலாஜி

Updated On :7 ஏப்ரல் 2026, 12:05 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30-ஆம் தேதி தொடங்கிய நிலையில் திங்கள்கிழமை (ஏப். 6) நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் 7000-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை இன்று (ஏப். 7) காலை முதல் நடைபெற்று வருகிறது. எந்தெந்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன மற்றும் நிராகரிக்கப்பட்டன ஆகிய விவரங்களைத் தோ்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, கொங்கு மண்டலத்தில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் வேட்புமனு, தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ். பி. வேலுமணியின் வேட்புமனு, கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி. ஆர். ஜி. அருண்குமார் வேட்புமனு, குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சரும், வேட்பாளருமான தங்கமணியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளன. மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Summary

TN Election 2026 Kongu belt constituencies candidates nominations accepted list

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.