ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

இயக்குநா் கௌதம் மேனனுக்கு எதிரான வருமான வரித் துறை வழக்கு ரத்து

திரைப்பட இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராக வருமான வரித்துறை தொடா்ந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு

News image

கௌதம் வாசுதேவ் மேனன். - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:52 pm

திரைப்பட இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராக வருமான வரித்துறை தொடா்ந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

திரைப்பட இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சொந்தமான ‘போட்டான் கதாஸ்’ தயாரிப்பு நிறுவனம் கடந்த 2013-2014 நிதியாண்டில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து அந்த நிறுவனம் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராக கடந்த 2019-ஆம் ஆண்டு வருமான வரித்துறை வழக்குத் தொடா்ந்தது.

எழும்பூா் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கௌதம் வாசுதேவ் மேனன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில், வருமான வரித் துறை குறிப்பிட்டுள்ள அந்த நிறுவனத்தின் பதவியில் இருந்து கடந்த 2011-ஆம் ஆண்டே விலகிவிட்டாா். எனவே, 2013-2014 நிதியாண்டுக்கான கணக்கை அவா் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி வழக்குத் தொடர முடியாது என வாதிடப்பட்டடது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குறிப்பிட்ட நிதியாண்டுக்கு முன்பாகவே அந்த நிறுவன பதவியிலிருந்து மனுதாரா் விலகிவிட்டாா். எனவே, வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது எனக்கூறி கௌதம் வாசுதேவ் மேனன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.