தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ (தேசிய ஜனநாயகக் கூட்டணி) முயற்சி முயற்சி செய்வதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 5) விமர்சித்தார்.
மதுரையை மணிப்பூராக மாற்றும் வன்முறை மாடலை தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்வைப்பதாகவும், மதுரைக்கான வளர்ச்சியை முன்வைப்பது திராவிட மாடல் ஆட்சி முன்வைப்பதாகவும் குறிப்பிட்டார்.
மதுரையில் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 5) பிரசாரம் மேற்கொண்டார்.
திருப்பரங்குன்றம் கிருத்திகா தங்கபாண்டியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
''வளர்ச்சியை கெடுக்கும், மக்களை பிளவுபடுத்தும் அரிய கூட்டணிதான் தேஜ கூட்டணி. மதுரையை மணிப்பூராக மாற்றும் வன்முறை மாடலை தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்வைக்கிறது.
மாமதுரையின் வளர்ச்சி என்றாலே திமுகதான். மேம்பாலம், சிலைகள் என ஏராளமான திட்டங்கள் திமுக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளன. மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் படித்து வங்கி மேலாளர் என பலர் தேர்வுகளில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
நமது பண்பாட்டு அடையளமான ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக நடத்த ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. வகை வடகரை சாலை மேம்பாடு, சிட்கோ, .22 லட்சம் பேருக்கு இணையவழி பட்டா என பல நன்மைகள் திமுக ஆட்சியில் மதுரைக்கு கிடைத்துள்ளன.
மகளிரை முன்னேற்றும், முதியோருக்கு அன்புக்கரம் நீட்டும் மதநல்லினக்கத்தோடு வாழும் திராவிட மாடல் ஆட்சி இது. ஆனால், அமைதியை சிதைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி துடிக்கிறது. அவர்களுக்கு அடிமையாக அதிமுக இருக்கிறது.
மதுரை மக்கள் புத்திசாலிகள். கலவரத்தை ஏற்படுத்த சிலர் துடித்தனர். அதனை மதுரை மக்கள் சிறப்பாக சதியை முறியடித்தனர். கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுக்கிறது பாஜக.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ஏன் இன்னும் திறக்கவில்லை?. தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ கூட்டணி முயற்சிக்கிறது. மதுரைக்கான வளர்ச்சியை முன்னெடுப்பது திராவிட மாடல், பிரிவினையை முன்வைப்பது ஆரிய மாடல்.
10 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் வளர்ச்சியை அதிமுக சீரழித்தது. அதற்கு துணையாக இருந்தது பாஜக. ஆனால், இந்தியாவுக்கே வழிகாட்டும் மாடல் திராவிட மாடல். தமிழ்நாட்டை தலைநிமிர வைத்துள்ளோம்.
தமிழ்நாட்டு வரிப்பணம் எங்கே போகிறது என இபிஎஸ் கேட்கிறார். எங்கள் பணத்தை வாங்கிக்கொண்டு பணம் எங்கே போகிறது எனக் கேட்டால் நியாயமா?
மத்திய அரசுக்கு தமிழ்நாடு கட்டும் வரிப்பணம் எங்கே போகிறது? நாங்கள் மத்திய அரசுக்கு கொடுக்கும் பணம் திரும்ப எவ்வளவு கிடைக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்கலுக்கு எவ்வளவு கிடைக்கிறது. இதை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா?
கிளாஸ் டாப்பருக்கு அட்வைஸ் வேண்டாம். நீங்கள் முதலில் பாஸ் மார்க் வாங்குங்கள். திமுக மீது மட்டும் அல்ல. தமிழ்நாட்டு மக்கள் மீதும் பாஜகவுக்கு வெறுப்பு உள்ளது. பொருளாதார வளர்ச்சி, தனிநபர் வருவாய், ஏற்றுமதியில் முதன்மையாக இருந்தால் வெறுப்பு வரத்தானே செய்யும்'' என மு.க. ஸ்டாலின் பேசினார்.
Summary
TN Election 2026 NDA Attempting to Destroy Tamil Nadu's DNA M.K. Stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தே. ஜ. கூட்டணிக்கு ஆதரவாக நாளை கோவையில் சந்திரபாபு நாயுடு பிரசாரம்!

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

மக்களை பற்றி கவலைப்படாதது தேசிய ஜனநாயக கூட்டணி: மு.க. ஸ்டாலின்

தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜ. கூட்டணி : மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



