விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாஜக தேர்தல் அறிக்கை இரண்டு நாள்களில் வெளியிடப்படும். காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு இருக்கிறது. சலசலப்புக்கு மத்தியில்தான் காங்கிரஸ், கூட்டணியில் சேர்ந்துள்ளது. மாணிக்கம் தாகூர் மற்றும் மூத்த தலைவர்கள் விருப்பமில்லாமல் திமுக கூட்டணியில் இருக்கின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொகுதியில் இருந்து வெளியே வந்திருப்பதும் கூட்டணியில் சலசலப்பைக் காட்டுகிறது. திமுக தேர்தல் அறிக்கை ஹீரா என்று கூறினார்கள், அது ஒரு ஜீரோ அறிக்கை. அது ஹீரோயின் என்றும் சொன்னார்கள், அது ஹெராயின் அறிக்கையாகத் தான் நான் பார்க்கின்றேன். தமிழ்நாடு முழுக்க கஞ்சா உற்பத்தியை கஞ்சா புழக்கத்தை உருவாக்கிய கட்சி திமுக கட்சி.
சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு ஏற்பட்டுள்ளது. பொய்யான வாக்குறுதியை திமுக கொடுத்துள்ளார்கள். ஐந்து ஆண்டுகால ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. இரண்டு வயது குழந்தை முதல் 70 வயது பெண்கள் வரை பாலியல் பலாத்காரம் படுகொலைகள் நடைபெறுகின்றன. அனைத்திற்கும் மது போதை பழக்கம் தான் காரணம். முழுக்க முழுக்க திமுக அரசு தான் இதற்கு காரணம். வரும் 23ஆம் தேதி அதற்கான பதில் நிச்சயம் தெரியும்
பிரதமர் கன்னியாகுமரிக்கும் கோயம்புத்தூருக்கும் பிரசாரத்துக்கு வர இருக்கிறார். நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டத்திற்கு ஓட்டுக்கும் சம்பந்தமில்லை. அவர் ஒரு சினிமா நடிகர். தேர்தல் முடிந்த பிறகு அதற்கான விளக்கம் தெரியும். நாளை 12 மணிக்கு சாத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்கிறேன். நாளை மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னாவிஸ் என்னுடன் மனுத்தாக்கலுக்கு வருகிறார். மத்திய அமைச்சர்கள் பிரசாரத்திற்கு வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
Summary
The crowds gathering for Vijay will not translate into votes, stated BJP State President Nainar Nagendran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதல்வரின் தொடர் போராட்டங்கள் தேர்தலில் தோல்வியடையும்: நயினார் நாகேந்திரன்
திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர அதிகாரிகள் நினைக்கிறார்கள்; அது நடக்காது!

பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது? - நயினார் நாகேந்திரன் பதில்!

தொகுதி மாறியது ஏன்? - நயினார் நாகேந்திரன் பதில்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



