மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தொகுதி மாறியது ஏன்? - நயினார் நாகேந்திரன் பதில்!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி...

News image

நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 6:44 am

திருநெல்வேலிக்குப் பதிலாக சாத்தூரில் போட்டியிடுவது ஏன்? என்ற கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"தமிழக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தவுடன், இன்று மாலை பாஜக வேட்பாளர் பட்டியலை அறிவிப்பார்.

எந்த தொகுதியில் நின்றாலும் திருநெல்வேலியின் செல்லப்பிள்ளை நான். என் வாழ்நாள் உள்ள வரை திருநெல்வேலி மக்களை என்றும் மறக்க முடியாது.

நான் நெல்லையில் பலமுறை போட்டியிட்டு இருக்கிறேன். இந்த முறை நெல்லை தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என கேட்டுக் கொண்டதால் அவர்கள் அங்கு போட்டியிடுகிறார்கள். அதிமுக போட்டியிட்ட சாத்தூரில் நான் போட்டியிடுகிறேன். நான் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் நெல்லை தொகுதியில் தனி கவனம் செலுத்தப்படும் என்று கூறிக்கொள்கிறேன்.

ஏப். 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறேன். ஆனால் பிரதமர் மோடி அன்று தமிழகம் வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் திமுக செய்த ஊழல்களை, குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யப்படும்" என்றார்.

Summary

Tamil Nadu BJP President Nainar Nagendran reply on Why he is contesting in Sattur instead of Tirunelveli

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.