தமிழகத்தில் தேர்தலுக்காக பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்களை நட்சத்திரப் பேச்சாளர்களாக பாஜக களமிறக்குகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி, அதற்கான பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கவிருக்கும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
பாஜக நட்சத்திரப் பேச்சாளர்கள் - சித்திரிப்பு
பட்டியலில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், கிஷன் ரெட்டி, எல். முருகன், சுரேஷ் கோபி, அர்ஜுன்ராம் மேக்வால், முரளிதர் மோஹல் பங்கேற்கின்றனர்.
மேலும், முதல்வர்களான உத்தர பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேசத்தின் மோகன் யாதவ், மகாராஷ்டிரத்தின் தேவேந்திர ஃபட்னவீஸ், ராஜஸ்தானின் பஜன்லால் சர்மா, அஸ்ஸாமின் ஹிமந்த பிஸ்வா சர்மா, தில்லியின் ரேகா குப்தாவும் நட்சத்திரப் பேச்சாளர்களாகப் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து, தமிழக பாஜக நிர்வாகிகளான நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, அரவிந்த் மோகன், சுகாதர் ரெட்டி, சி.டி. ரவி, தேஜஸ்வி சூர்யா, பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், எச். ராஜா, வானதி சீனிவாசன், சரத்குமார், வி.பி. துரைசாமி, குஷ்பு சுந்தர், புரட்சி கவிதாசன், சையது இப்ராஹிம், கே.எஸ். ராதாகிருஷ்ணன், நமிதா, ஆர். செந்தில், கஸ்தூரி சங்கர், ஒய்.ஜி. மதுவந்தி, ரவிசந்திரன் ஆகியோரும் பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளர்களாக களமிறங்குகின்றனர்.
Summary
In Tamil Nadu, the BJP fields the Prime Minister, Union Ministers, and State Chief Ministers as star campaigners.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவை தமிழக மக்கள் விரட்டியடிக்க போவது உறுதி: அண்ணாமலை பேச்சு

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் இருமுனைப் போட்டிதான்; திமுக - காங். கூட்டணிக்குள் குழப்பம்! அண்ணாமலை

சாத்தூரில் போட்டி! நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

