மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுகவை தமிழக மக்கள் விரட்டியடிக்க போவது உறுதி: அண்ணாமலை பேச்சு

திமுகவை தமிழக மக்கள் விரட்டியடிக்க போவது உறுதி என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்திருப்பது...

News image

மயிலாப்பூரில் பாஜக வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து பேசுகிறாா் அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான கே. அண்ணாமலை. - ட்விட்டர்

Updated On :20 ஏப்ரல் 2026, 9:17 am

சென்னை: ஊழல் செய்யவதற்காகவே திட்டங்களை கொண்டு வந்து, மக்களை அவதி அடைய செய்யும் தீயசக்தி திமுகவை தமிழக மக்கள் விரட்டியடிக்க போவது உறுதி என பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான கே. அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் களம் காணும் மருத்துவர் தமிழிசையை ஆதரித்து திங்கள்கிழமை மயிலாப்பூர் திருவள்ளுவர் சாலை, விசாலாட்சி தோட்டம், மந்தைவெளி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலை பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியது:

கடந்த 5 ஆண்டுகால, தீயசக்தி திமுகவின் காட்டாட்சியில் 8,008 கொலைகள், 2,080 பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்தது தான் திமுக தனது ஆட்சியில் செய்துள்ள ஒரே சாதனை.

தமிழகத்தின் தலைநகரமாக திகழும் சிங்கார சென்னையை, “மூழ்கிக்கொண்டிருக்கும்” சென்னையாக மாற்றி மழைநீர் வடிகால் என்ற பெயரில் திமுகவினர் ரூ.4000 கோடி முறைகேடு செய்யவே ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்கள். சென்னை மக்கள் கோடிக்கணக்கில் வரிமேல் வரி செலுத்தியும் சாலைகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் கூட அவல நிலையில் தான் இன்றும் இருக்கிறது என்பது வெட்கக்கேடு. கொள்ளையடிக்கவும், ஊழல் செய்யவும் மட்டுமே திட்டங்களை கொண்டு வந்து, மக்களை அவதி அடைய செய்யும் தீயசக்தி திமுகவை தமிழக மக்கள் விரட்டியடிக்க போவது உறுதி.

எனவே, மாற்றத்தின் நம்பிக்கையாக, மக்களாட்சியின் அடையாளமாக இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மயிலாப்பூர் தொகுதி பாஜக வெற்றி வேட்பாளர் தமிழிசைக்கு தாமரைச் சின்னத்தில் வாக்களித்து மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா்.

Summary

It is certain that the people of Tamil Nadu will drive out the DMK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.