மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கரூர் கூட்ட நெரிசல்! இடையூறு விளைவிக்கவே காலியான ஆம்புலன்ஸ்கள் வந்தன: நிர்மல்குமார்

கரூரில் வேண்டுமென்றே காலியான ஆம்புலன்ஸ்கள் மூலம் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக தவெக நிர்வாகி நிர்மல்குமார் குற்றச்சாட்டு

News image

கரூர் கூட்ட நெரிசல் - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 3:14 am

கரூரில் வேண்டுமென்றே காலியான ஆம்புலன்ஸ்கள் மூலம் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக தவெக நிர்வாகி நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுடன் தவெக வேட்பாளர் நிர்மல்குமார் பேசுகையில், கரூரில் பிரசாரத்துக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் இருந்த சாலையைக் கடக்க வேண்டுமென்றால், கிட்டத்தட்ட 2 மணிநேரம் ஆகும். 3 கி.மீ. சாலையாக இருந்தாலும், தவெக கூட்டத்தால், சாலையைக் கடக்க 2 மணிநேரம் ஆகும். ஆனால், அதே பாதையில் சுற்றிச் சென்றால், 10 நிமிடங்களில் சென்று விடலாம்.

ஆனால், அதையும் மீறி, மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறி, பல காலியான அவசர ஊர்திகள் கூட்டத்தினுள்ளே அனுப்பப்பட்டன. இவ்வாறு இடையூறு செய்வதற்காகவே ஒருசில செயல்பாடுகள் இருப்பதால்தான், சந்தேகத்தின்பேரில் கூறினோம். ஏனெனில், திமுக என்னென்ன செய்கிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

ஒரு கூட்டம் நடக்கும்போது, கூட்டத்தினுள் 10 அவசர ஊர்திகளை விடுவது, 10 ஊர்திகளும் காலியாகவும், அவற்றின் ஓட்டுநர்களும் முழு போதையில் வருகின்றனர்.

இவ்வாறு போதையில் வந்த அவசர ஊர்தி ஓட்டுநர்களைப் பிடித்த தவெக நிர்வாகிகள், காவல்துறையில் ஒப்படைத்தனர். ஆனால், அவர்களைக் காவல்துறை காப்பாற்றி அனுப்பி விட்டது.

இவ்வாறு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களைத்தான் நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். தவிர, பொதுமக்களின் பயன்பாட்டில் இருப்பவற்றைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை என்று தெரிவித்தார்.

Summary

Karur Stampede! Empty Ambulances Arrived Solely to Cause Disruption: Nirmalkumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.