மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முதல்வர் ஸ்டாலினை விட பல மடங்கு சொத்து! வில்லிவாக்கம் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா!

முதல்வர் ஸ்டாலினை விட பல மடங்கு சொத்து மதிப்புள்ள வில்லிவாக்கம் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா பற்றி..

News image

ஆதவ் அர்ஜுனா - dps

Updated On :2 ஏப்ரல் 2026, 7:09 am

சென்னை: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தனக்கு ரூ.6.25 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், தவெக தேர்தல் பிரசார - மேலாண்மை பொதுச் செயலரும் வில்லிவாக்கம் வேட்பாளருமான ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருக்கும் தவெக தலைவர் விஜய், ஏற்கனவே பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில் தற்போது திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்டவை களம்கண்டுள்ளன.

தவெக சார்பில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா திங்கள்கிழமை வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த வேட்புமனுவுடன் இணைக்கப்பட்டிருந்த பிரமாணப் பத்திரத்தில், தனக்கு ரூ.197.52 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதில், அசையும் சொத்துகள் ரூ.180.03 கோடி என்றும் ரூ.162.14 கோடி மதிப்பிலான சொத்துகள் தன்னுடைய மனைவி டெய்ஸி அர்ஜுனா பெயரில் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 - 25ஆம் ஆண்டில் இவர் ரூ.11.10 கோடி வருவாய் ஈட்டியதாகவும் மனைவி ரூ.6.85 கோடி வருவாய் ஈட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தான் தொழிலதிபர் என்றும், அவருக்கு சொந்தமாக ரூ.2.29 கோடி மதிப்புள்ள 1,691 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும், மனைவிக்கு ரூ.3.01 கோடி மதிப்புள்ள 2,225.62 கிராம் தங்க நகைகள், ரூ.6.16 கோடி மதிப்பிலான வைர நகைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நிறுவனங்களிலும் ஆதவ் அர்ஜுனா ரூ.2.23 கோடி ரூபாயை முதலீடு செய்திருப்பதாகவும், இவருக்கு சொந்தமாக நான்கு வாகனங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

About Villivakkam candidate Adhav Arjuna, whose assets are many times more valuable than Chief Minister Stalin..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.