மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழ்நாட்டுக்கும் தில்லிக்கும் இடையிலான தேர்தல்: உதயநிதி

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் தில்லிக்கும் இடையிலான தேர்தல் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

News image

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் - X | Udhayanidhi Stalin

Updated On :2 ஏப்ரல் 2026, 2:15 pm

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் தில்லிக்கும் இடையிலான தேர்தல் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "நான் கடந்த 5 ஆண்டுகளாக இங்குள்ள மக்களுடன் இருக்கிறேன். கரோனா, மழை உள்ளிட்ட எந்தக் காலங்களிலும்தான்.

இந்தத் தொகுதியில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகையால், அவர்கள் தொடர்ந்து எனக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

எங்கள் மாநிலத்தை தில்லி கைப்பற்ற முயற்சிக்கிறது. ஆனால், தமிழ்நாட்டுக்கு எந்த நிதியோ எந்தத் திட்டமோ வழங்குவதில்லை. அவர்கள் அதிமுக மூலம் மாநிலத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.

அதனால்தான், இந்தத் தேர்தல் தில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான தேர்தல் என்றும், தமிழ்நாடு அணியே வெற்றி பெறும் என்பதில் நாங்கள் உறுதியாக இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

Summary

This election is between Delhi versus TamilNadu, says Deputy Chief Minister Udhayanidhi Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.