திருச்சி மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று(புதன்கிழமை) பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
திருவாரூரில் நேற்று(செவ்வாய்க்கிழமை) தனது தோ்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கிய முதல்வா், நேற்று இரவு திருச்சிக்கு வந்து தங்கினாா்.
தொடர்ந்து இன்று காலை காந்தி மார்க்கெட் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், அப்பகுதியில் நடந்து சென்று திமுகவின் திருச்சி கிழக்கு வேட்பாளர் இனிகோ இருதயராஜுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்னர் அங்குள்ள தேநீர் கடைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோருடன் சேர்ந்து தேநீர் அருந்தினார்.
இதன் தொடர்ச்சியாக திருச்சி தென்னூா் உழவா் சந்தை திடலில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் முதல்வா் பங்கேற்று, இம்மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர்.
கே.என். நேரு (திருச்சி மேற்கு), அன்பில் மகேஸ் பொய்யாமொழி (திருவெறும்பூா்), இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு), ப. அப்துல்சமது (மணப்பாறை), எஸ். துரைராஜ் (ஸ்ரீரங்கம்), சீ. கதிரவன் (மண்ணச்சநல்லூா்), த. பாரிவள்ளல் (லால்குடி), என்.எஸ். கருணைராஜா (முசிறி) ஆகியோருக்கும் துறையூரில் அறிவிக்கப்படவுள்ள காங்கிரஸ் வேட்பாளருக்கும் ஆதரவு அளித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.
திருச்சியில் கடந்த தேர்தலில் 9 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இந்த முறையும் திருச்சி மக்கள் 100% வெற்றியைத் தர வேண்டும் என்று பேசினார்.
தொடர்ந்து திருச்சி மாவட்டத்திற்கு திமுக அரசு செய்தவற்றை பட்டியலிட்டு பேசி வருகிறார். திருச்சி மாவட்டத்திற்கு ரூ. 26,000 கோடி அளவில் நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்தோம் என்று கூறினார்.
"தலைநகர் சென்னைக்கே சவால் விடும் வகையில் திருச்சி இன்றைக்குத் தரம் உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதை என்னால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும். மொத்தமாக டோட்டல் போட்டால், நான் பெருமையோடு சொல்கிறேன்... கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் திருச்சிக்காக 26 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான் உரிமையுடன் உங்களிடத்தில் உரிமையோடு வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.
2021-ஆம் ஆண்டு எங்கள் மேல் நீங்கள் எல்லாம் நம்பிக்கை வைத்து, ஆதரவளித்து பொறுப்பில் உட்கார வைத்தீர்கள். உங்களின் நம்பிக்கையை நான் இன்றைக்குக் காப்பாற்றி இருக்கிறேன். கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் இன்றைக்கு நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். கொடுக்காத பல வாக்குறுதிகளையும் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பயண வசதி செய்து தருவோம் என்று சொன்னேன். முதலமைச்சரான முதல் நாளே பதவியேற்றுக் கொண்டு கோட்டைக்குச் சென்று, முதல் கையெழுத்தைப் போட்டேன்.
மகளிருக்கு மாதம்தோறும் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று சொன்னோம். ஒரு கோடியே 31 இலட்சம் மகளிருக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை வழங்குகிறோம். உண்டா, இல்லையா? இப்போது நம்மைப் பார்த்துதான் மற்ற மாநிலங்களிலும் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
காலை உணவுத் திட்டம், வாக்குறுதியில் சொல்லாத திட்டம். 19 இலட்சம் பிள்ளைகள் சூடான சுவையான காலை உணவைச் சாப்பிட்டு படிக்கிறார்கள்.
நான் முதல்வன் திட்டமும் தேர்தல் அறிக்கையில் சொல்லப்படவில்லை. 48 இலட்சம் திறன் பயிற்சி சான்றிதழ்களை நம்முடைய இளைஞர்கள் நான் முதல்வன் திட்டத்தில் இன்றைக்குப் பெற்றிருக்கிறார்கள்.
அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதை உறுதிசெய்ய உருவாக்கப்பட்ட திட்டங்கள்தான் புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள். 9 இலட்சம் மாணவ-மாணவியர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவை நீங்கள் எல்லாம் சிறப்பாகக் கொண்டாட 3,000 ரூபாய் வழங்கினோம். 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு அனைவருக்கும் வந்ததா?
மகளிர் உரிமைத் தொகையைத் தேர்தலை காரணம் காட்டித் தடுக்க நினைத்தார்கள். அதையும் முன்கூட்டியே தெரிந்து கொண்டு, மூன்று மாதங்களுக்கான தொகையையும் கோடை காலச் சிறப்பு நிதி 2 ஆயிரம் ரூபாயும் சேர்த்து, 5 ஆயிரம் ரூபாயை அட்வான்சாகக் கொடுத்தோம். 5 ஆயிரம் ரூபாய் உங்களுக்கு வந்ததா, இல்லையா?
அரசு ஊழியர்களின் நீண்ட ஆண்டகாலப் பிரச்சினை, சற்றேறக்குறைய 22 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றி, சொன்னபடியே உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தி, இன்றைக்குச் சாதனை படைத்திருக்கிறோம்.
இவை அனைத்திற்கும் மேல், தமிழ்நாட்டில் சாதிக் கலவரம் இல்லை, பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் போன்று மதக் கலவரங்கள் இல்லை. உத்தர பிரதேசம் போன்று கும்பல் வன்முறை இல்லை. மணிப்பூர் போன்று தொடர் வன்முறைகள் இல்லை.
இப்படி அனைத்தையும் உருவாக்க வேண்டும் என்று பா.ஜ.க. செய்த சூழ்ச்சிகளையும் நாம் முறியடித்திருக்கிறோம். அமைதியான சூழலும், திறமையான மனித வளமும், நம்முடைய ஆட்சியில் இருக்கும் காரணத்தினால்தான் இன்றைக்கு முதலீடுகளும் தமிழ்நாட்டில் வந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்! அதற்கான தெளிவான செயல்திட்ட அறிக்கையாக தி.மு.க. தேர்தல் அறிக்கையை நான் வெளியிட்டிருக்கிறேன். அதில் நான் சொல்லியிருக்கும் அறிவிப்புகள் பல இருக்கிறது. நீங்கள் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். ஹைலைட்டாக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் சில வாக்குறுதிகளை மட்டும் நான் சொல்கிறேன்.
மாதம்தோறும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை என்பதை இரண்டு மடங்காக இனி 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க போகிறோம்!
அதேபோன்று, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு இப்போது மாதாமாதம் 1,000 ரூபாய் வழங்கி வருகிறோம். இனி அது ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
அதேபோன்று, காலை உணவுத் திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்த நாம் அறிவித்திருக்கிறோம்! மேலும், 15 இலட்சம் மாணவர்கள் அதனால் பயன்பெறப் போகிறார்கள். இன்னும் அதிகமான தாய்மார்கள் காலையில் சீக்கிரம் எழுந்து சமையல் செய்யும் சுமை குறையப் போகிறது.
அதேபோன்று, இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் இன்னொரு சூப்பர் டூப்பர் வாக்குறுதியையும் கொடுத்திருக்கிறோம். இல்லத்தரசிகள் தங்களின் வீட்டிற்குத் தேவையான வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், இண்டக்ஷன் அடுப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருள்களைப் புதிதாக வாங்கவும் அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் இத்தகைய பொருள்களை கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக வேறு வாங்கிக் கொள்ளவும் ‘இல்லத்தரசி’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். அதுவும் நீங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள உங்களுக்குப் பிடித்த கடைகளிலேயே உங்களுக்குப் பிடித்த கம்பெனி, உங்களுக்கு பிடித்த மாடலாகப் பார்த்து, இந்தப் பொருள்களை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் எவ்வளவு ரூபாய் கூப்பன்? தலா 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன் கொடுக்கப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறோம்.
இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் இதைப் பற்றித்தான் ஒரே பேச்சாக இருக்கிறது. நம்முடைய பெண்கள் ஒரு சேலை வாங்கினால் கூட, அவர்களுக்குப் பிடித்த கடையில் அவர்களுக்குப் பிடித்த டிசைனில், அவர்களுக்குப் பிடித்த கலரில் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதை மனதில் வைத்துதான் இந்த திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இல்லத்தரசி திட்டத்தில் என்ன வாங்க வேண்டும், எப்படி வாங்க வேண்டும் எல்லாமே ‘உங்கள் சாய்ஸ்’ தான்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து இன்று மாலை கரூரில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.
Summary
Chief Minister mk stalin campaign in Trichy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்னும் 16 நாள்களே உள்ளன! - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
திருச்சிக்கு ரூ. 26 ஆயிரம் கோடி திட்டங்கள்: முதல்வா் ஸ்டாலின் பெருமிதம்

இபிஎஸ்ஸை முதல்வராக்குவோம் என்று மோடி இதுவரை சொல்லியிருக்கிறாரா? மு.க. ஸ்டாலின் கேள்வி

திமுகவை நம்பினால் நடுரோட்டில் நிற்பார்கள்: மயிலாப்பூரில் இபிஎஸ் பேச்சு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

