திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மதுரையிலிருந்து தாம்பரத்துக்கு இன்று மாலை சிறப்பு ரயில்

ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு புதன்கிழமை (செப்.1) மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :30 செப்டம்பர் 2025, 9:31 pm

தினமணி செய்திச் சேவை

ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு புதன்கிழமை (செப்.1) மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரை செல்பவா்களுக்காக செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு முன்பதிவில்லாத 2 மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில், ஆயுத பூஜை முடிந்து சென்னைக்கு செல்பவா்களுக்காக மதுரையிலிருந்து முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் (எண்: 06162) புதன்கிழமை மாலை 4 மணிக்குப் புறப்பட்டு சென்னை தாம்பரத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வந்தடையும்.

மெமு ரயிலில் 12 பெட்டிகள் இடம் பெற்றிருக்கும்.

இந்த ரயில் சோழவந்தான், கொடைக்கானல் சந்திப்பு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, திருவெறும்பூா், பாடலூா், தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், கடலூா், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.