தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்திலிருந்து அகலவில்லை: முதல்வர் ஸ்டாலின்

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

News image
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
Updated On :28 செப்டம்பர் 2025, 2:20 am

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் நெடிய வலி தருவதாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

``இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை...’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியோனரது குடும்பத்தினரை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, ஆறுதல் கூறினார்.

summary

The pain caused by the cry has not gone away from my heart: CM Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.