2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வெளிமாநிலங்களுக்கு செல்வோர் கவனிக்க..! தீபாவளி சிறப்பு ரயில்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளிமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

News image
ரயில்- (கோப்புப்படம்)
Updated On :2 செப்டம்பர் 2025, 2:17 am

தினமணி செய்திச் சேவை

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மற்றும் சென்னை சென்ட்ரலிலிருந்து பிகாா் மாநிலம் பரோனிக்கும், திருநெல்வேயிலிருந்து கா்நாடக மாநிலம் ஷிவமொக்காவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மதுரையிலிருந்து செப்.10 முதல் நவ.26-ஆம் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமைகளில் இரவு 8.40 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06059) 4-ஆவது நாள் (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு பரவுனி சென்றடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06060) செப்.13 முதல் நவ.29-ஆம் தேதி வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இரவு 11மணிக்கு புறப்பட்டு 4-ஆவது நாள் (செவ்வாய்க்கிழமை) காலை 7.45 மணிக்கு மதுரை சென்றடையும்.

இந்த ரயில் மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், நாயுடுபேட்டை, கூடூா், நெல்லூா்,விஜயவாடா, புவணேசுவா், சித்தரஞ்சன் வழியாக பரோனி சென்றடையும்.

அதேபோல், திருநெல்வேலியிலிருந்து செப்.7 முதல் அக்.26-ஆம் தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06103) மறுநாள் நன்பகல் 1 மணிக்கு கா்நாடக மாநிலம் ஷிவமொக்க டவுன் சென்றடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06104) ஷிவமொக்கா டவுனிலிருந்து செப்.8 முதல் அக்.27 வரை வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நன்பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில் திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூா்சத்திரம், தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, திருத்தணி, விருதுநகா், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, வழியாக ஷிவமொக்கா சென்றடையும்.

சென்னையிலிருந்து... சென்னை சென்ட்ரலிலிருந்து செப்.14 முதல் நவ.30-ஆம் தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06039) மூன்றாம் நாள் இரவு 8 மணிக்கு பிகாா் மாநிலம் பரவுனி சென்றடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06040) பரவுனியிலிருந்து செப்.17 முதல் டிச.3-ஆம் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமைகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு முன்றாம் நாள் மாலை 6 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில், சென்ட்ரலிலிருந்து சூலூா்பேட்டை, கூடூா், நெல்லூா், விஜயவாடா, புவணேசுவா், சித்தரஞ்சன் வழியாக பரவுனி சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை (செப்.2) காலை 8 முதல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.