தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தீபாவளி: திருநெல்வேலி - செங்கல்பட்டு சிறப்பு ரயில்

சென்ட்ரல் - மங்களூரு, எழும்பூா் - திருவனந்தபுரம், திருநெல்வேலி - செங்கல்பட்டு இடையே சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கம்..

News image
ரயில் (கோப்புப்படம்)- ANI
Updated On :11 அக்டோபர் 2025, 12:04 am

தினமணி செய்திச் சேவை

தீபாவளியை முன்னிட்டு சென்ட்ரல் - மங்களூரு, எழும்பூா் - திருவனந்தபுரம், திருநெல்வேலி - செங்கல்பட்டு இடையே சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அக்.21,22 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06156) பிற்பகல் 1.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்:06155) செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில், திருநெல்வேலியிலிருந்து கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா் வழியாக செங்கல்பட்டு சென்றடையும்.

சென்னை ரயில்கள்: போத்தனூரிலிருந்து அக்.19-ஆம் தேதி இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06044) மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06001) சென்ட்ரலிலிருந்து அக்.20-இல் பிற்பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

மங்களூரிலிருந்து அக்.21-இல் மாலை 4.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் ((எண்: 06002) மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்ட்ரல் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06043) அக்.22-இல் சென்ட்ரலிலிருந்து பிற்பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு போத்தனூா் சென்றடையும். இந்த ரயில்கள், சென்ட்ரலிலிருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு வழியாக மங்களூரு சென்றடையும்.

அதேபோல், திருவனந்தபுரத்திலிருந்து அக்.21-இல் மாலை 5.10 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (எண்: 06108) மறுநாள் காலை 11 மணிக்கு எழும்பூா் வந்தடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06107) எழும்பூரிலிருந்து அக்.22-இல் பிற்பகல் 1.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இந்த ரயில், எழும்பூரிலிருந்து பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு வழியாக திருவனந்தபுரம் சென்றடையும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவுகள் அக். 12-ஆம் தேதி காலை 8 முதல் தொடங்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.