தென்காசியில் 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்து! 6 பேர் பலி
தென்காசியில் இடைகால் அருகே 2 பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர், 40 பேர் காயமடைந்தனர்.
தென்காசியில் இடைகால் அருகே 2 பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர், 40 பேர் காயமடைந்தனர்.
By இணையதளச் செய்திப் பிரிவு
Vanisri
தென்காசி மாவட்டம் இடைகால் அருகே, இன்று காலை 11 மணியளவில், 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். 40 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
தென்காசி நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றன் மீது ஒன்று மோதியதில், சம்பவ இடத்தில் 6 பேர் பலியானதாகவும், அவர்களில் 5 பெண்கள், ஒரு ஆண் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், விபத்துக்குள்ளான பேருந்துகளில் சிக்கி, காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தென்காசி அரசு மருத்துவமனையில் இதுவரை 25 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை 11 மணியளவில், தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்ற பேருந்தும் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
திடீரென பேருந்து ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு பேருந்து மற்றொரு பேருந்து மீது இடித்துள்ளது. விபத்து நேர்ந்த போது, இரண்டு பேருந்துகளிலும் முழு அளவில் பயணிகள் இருந்துள்ளனர். இதனால் பாதிப்பும் அதிகளவில் நேரிட்டுள்ளது.
விபத்து நடந்ததும் அருகில் இருந்த மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்துகளின் இடிபாடுகளுக்குக் கீழேயும் சில பயணிகள் சிக்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில், ஒரு பேருந்தின் முன்பகுதியும், மற்றொரு பேருந்தின் பின் பகுதியும் கடுமையாக சேதமடைந்திருக்கிறது. ஒரு பேருந்தின் பின் பக்க இருக்கைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதன் மூலம், அதிலிருந்த பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Six people were killed and 20 injured when two buses collided near Idakal in Tenkasi.
இதையும் படிக்க.. அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம்! திறந்து வைத்தார் உதயநிதி!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது