நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் போதைப் பொருள் தொடர்பான வாட்ஸ் ஆப் குழுவில், சினிமா பிரபலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மற்றும் அவரது குழுவிடம் இருந்து போதைப் பொருள் வாங்கி பயன்படுத்திய வழக்கில் தமிழ் திரை நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரைத் தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணா ஆகிய இருவரும் நுங்கம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவின் செல்போனை கைப்பற்றி சைபர் போலீஸார் உதவியுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அவரது செல்போனில் அழிக்கப்பட்ட குறுந்தகவலை மீட்டு வாட்ஸ் ஆப் குழுக்களையும் ஆய்வு செய்தனர்.
அப்போதும, வாட்ஸ் ஆப்பில் கிருஷ்ணா அவரது நண்பர்களுடன் போதைப் பொருள் தொடர்பான விவரங்களை கோட் வேர்டில் பேசியதும், மேலும் வாட்ஸ் ஆப் குழுக்களில் நேரம், இடம் ஆகியவற்றை பகிர்ந்து போதைப் பொருளை பயன்படுத்தி வந்ததும் போலீஸார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அந்த வாட்ஸ் ஆப் குழுவில் 10 நபர்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது, அவர்கள் கிருஷ்ணாவின் கல்லூரி நண்பர்கள் மற்றும் திரை உலக நண்பர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இவர்கள் இந்த வாட்ஸ்ஆப் குழு மூலமாக பல்வேறு போதைப் பொருள் விருந்துகளை நடத்தி வந்துள்ளனர்.
இதனால், அந்த குழுவில் இருந்த மற்றவர்களும் போதைப் பொருளை பயன்படுத்தி இருப்பார்கள் என்ற நோக்கத்தில் அனைவருக்கும் நுங்கம்பாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பி நேரடியாக வரவைத்து விசாரணை நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.
மேலும், இந்த விசாரணையின் மூலம் அவர்கள் வேறு யாருக்காவது போதைப் பொருள்களை விற்பனை செய்து உள்ளார்களா அல்லது அவர்களுடன் இணைந்து வேறு யாராவது பயன்படுத்தி உள்ளார்களா என்பது தெரியவரும் எனவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதேபோல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரசாத், பிரதீப், மற்றும் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீ கிருஷ்ணா ஆகியோரையும் போலீஸ் காவாலில் எடுக்க நுங்கம்பாக்கம் போலீஸார் திட்டமிட்டு வருகின்றனர்.
Summary
It has been revealed that a WhatsApp group related to drugs on actor Krishna's cell phone includes film celebrities.
இதையும் படிக்க: சென்னை ஐஐடியில் மாணவிக்குப் பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சா்வதேச போதைப் பொருள் வழக்கில் தலைமறைவு நபா் திருச்சியில் கைது

நிலுவையில் உள்ள பயங்கரவாதம், போதைப் பொருள் வழக்குகள் எத்தனை? மாநில அரசுகளிடம் விவரம் கோரியது உச்சநீதிமன்றம்
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது

13 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்குத் தனி வாட்ஸ் ஆப் கணக்குகள் அறிமுகம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


