சென்னையில் 120 மின்சார பேருந்துகளின் சேவையை வரும் ஜூன் 30 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளார்.
டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சாா்பில், 625 மின்சாரப் பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சென்னை வியாசா்பாடி பணிமனையிலிருந்து 120 மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான பராமரிப்புக் கூடம், அலுவலக நிா்வாக கட்டடம், பணியாளா் ஓய்வறை ஆகியவை புதுப்பிக்கப்படுவதுடன், புதிய மின்மாற்றிகள் பொருத்துதல் மற்றும் தீயணைக்கும் பாதுகாப்பு உபகரணங்களை நிறுவுதல் போன்ற கட்டுமானப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னையைப் பொருத்தவரை முதல்கட்டமாக 625 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்காக 5 பணிமனைகள் முற்றிலுமாக மின்சார பேருந்து இயக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் 120 மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூன் 30 ஆம் தேதி தொடக்கி வைக்கவுள்ள நிலையில், முக்கிய நகரங்களுக்கும் இப்பேருந்து சேவை விரிவுபடுத்தப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Summary
Chief Minister M.K. Stalin will launch the service of 120 electric buses in Chennai on June 30th.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்! வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்!!

சென்னையில் இருந்து 1,88,705 பேர் சிறப்புப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம்!
'மீண்டும் திமுக ஆட்சி' வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


