முதல்வர் ஸ்டாலின் வேலூர் சுற்றுப் பயணத்தின்போது, வேலை வேண்டி மனு அளித்த கூலித் தொழிலாளி பொற்செல்விக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தில் விடுதிக் காவலராக நியமனம் செய்து, அதற்கான பணி நியமன ஆணையினை இன்று (ஜூன் 25) வழங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அப்போது, காட்பாடி வட்டம் சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பொற்செல்வி என்பவர் முதல்வரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் ஆதரவற்ற நிலையில் வறுமை சூழ்நிலையில் வாழ்வதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
முதல்வர் ஸ்டாலினிடம் பொற்செல்வி வழங்கிய கோரிக்கை மனுவில் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், தன்னுடைய மாமனார் ஒரு மாற்றுத்திறனாளி என்பதாலும் அவர்கள் அனைவரையும், தான் கூலி வேலை செய்து காப்பாற்றி வருவதாகவும் தெரிவித்து தனக்கு ஏதேனும் ஒரு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று கோரி இன்று காலை விண்ணப்பம் மனு அளித்தார்.
பொற்செல்வியின் ஏழ்மை நிலையை பரிவோடு கருதி, அவரது மனுவை உடனடியாக ஏற்றுக்கொண்டு, முதல்வர் பொற்செல்விக்கு ரூபாய் 17,000 மாத சம்பளத்தில் காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தின் விடுதி காவலருக்கான பணி நியமன ஆணையை அவரிடம் வழங்கினார்.
முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்த சில மணி நேரங்களில், பணி நியமன ஆணை கிடைத்ததால், அதனை பெற்றுக் கொண்ட பொற்செல்வி அளவில்லாத மகிழ்ச்சியோடு, முதல்வர் ஸ்டாலினை வணங்கி நன்றி தெரிவித்தார்.
இதையும் படிக்க: 2026 முதல் 10ம் வகுப்புக்கு இரண்டு பொதுத் தேர்வுகள்: சிபிஎஸ்இ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

750 பேருக்கு பணி ஆணை வழங்கும் விழா

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

கல்லூரி மாணவிகள் 234 பேருக்கு பணி நியமன ஆணை
உதவிப் பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


