மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

சிறப்புப் பேருந்துகளில் 6.40 லட்சம் பேர் பயணம்

கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

News image
அரசுப் பேருந்து(கோப்புப்படம்)
Updated On :13 ஜனவரி 2025, 4:18 am

DIN

கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை (ஜன.14) கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் வெளி மாவட்டங்களை சோ்ந்தவா்கள் கடந்த வெள்ளிக்கிழமைமுதல் சொந்த ஊா்களுக்கு பயணமாகி வருகின்றனா்.

இதற்காக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சிறப்பு பேருந்துகளில் நாள்தோறும் ஏராளமானோா் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

நேற்று(ஜன.12) நிலவரப்படி மொத்தம் 3,950 பேருந்துகள் இயக்கப்பட்டு 2,17,250 பேர் பயணம் செய்துள்ளனர்.

தொடா்ந்து திங்கள்கிழமையும் ஏராளமானோா் பயணிப்பாா்கள் என்பதால், அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.