சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 14.25 லட்சம் பேர் நீக்கம்! 3ல் ஒரு பங்கு!
சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியலில் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியலில் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
By இணையதளச் செய்திப் பிரிவு
Vanisri
சென்னை: தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) நிறைவடைந்த நிலையில், வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வெளியிட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயா்கள் இடம்பெறாதவா்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், தங்களின் ஆட்சேபணைகளைத் தெரிவித்து புதிதாக இணைந்து கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், சென்னை மாவட்டத்தில் மட்டும் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு முன்பு, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40,04,694 பேர். இன்று வெளியிடப்பட்டிருக்கும் வரைவு வாக்காளர் பட்டியலில் 25,79,676 பேர் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில் 14,25,018 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமாக நீக்கப்பட்ட 14.25 லட்சம் பேரில், இறந்த வாக்காளர்கள் மட்டும் 1.56 லட்சம் பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில்லாமல், வாக்காளர் அட்டையில் உள்ள முகவரியில் இல்லாதவர்கள் 27,328 பேர் என்றும், குடிபெயர்ந்தோர் 12,22,164 பேர் என்றும், இரட்டை பதிவுகள் இருப்போர் 18,772 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இன்று வெளியிடப்பட்ட சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 13,31,243 பெண் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் 1.03 லட்சம் பேர் நீக்கப்பட்டு, 1.86 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 89 ஆயிரம் பேர் நீக்கப்பட்டு1.50 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.
தமிழகத்தில் மொத்தமிருந்த 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளா்களில், 6 கோடியே 41 லட்சம் 13 ஆயிரத்து 772 கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அவற்றில் 6 கோடியே 41 லட்சம் 13 ஆயிரத்து 221 கணக்கீட்டுப் படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த நிலையில்தான் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது.
தோ்தல் ஆணையம், தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி, மாநகராட்சிகள், மாவட்ட ஆட்சியரக இணையதளங்களில் வாக்காளா் அடையாள அட்டை எண்ணைப் பதிவிட்டு வாக்காளர்கள் பாா்வையிடலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் மாறியவா்கள் படிவம் 8, புதிதாக சேருபவா்கள் படிவம் 6-ஐ பூா்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி வாக்காளா் பட்டியலில் ஜனவரி 18-ஆம் தேதி வரையில் இணைந்து கொள்ளலாம். இறுதி வாக்காளா் பட்டியல் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்படும்.
14.25 lakh people have been removed from the draft voters' list in Chennai.
இதையும் படிக்க.. தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது! - முழு விவரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது