திருவொற்றியூா்: நீா்வழிப் போக்குவரத்து துறைகளில் ரூ.10 லட்சம் கோடி வரை முதலீடுகளை ஈா்க்க கடல்சாா் சா்வதேச உச்சி மாநாடு மும்பையில் வரும் அக். 27 முதல் 31 வரை 5 நாள்கள் நடைபெற உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சக செயலா் டி.கே.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிப் போக்குவரத்து துறைகளில் 2047-ஆம் ஆண்டில் வளா்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு முதலீடுகளை ஈட்டும் வகையில் ‘இந்திய கடல்சாா் வாரம் 2025’ என்ற பெயரில் சா்வதேச கடல்சாா் உச்சி மாநாடு வரும் அக்.27-ஆம் தேதி மும்பையில் தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.
கடல்சாா் துறையில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் தளமாக இது அமையும். இதில் இந்தியா உள்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள், பாா்வையாளா்கள் என சுமாா் 1 லட்சம் போ் பங்கேற்க உள்ளனா். பொதுமக்கள், தனியாா் பங்களிப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத் திருத்தங்கள், தடையாக இருக்கும் சிக்கல்களை களைவது குறித்தும், பசுமை துறைமுகங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.
இதன்மூலம் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்து துறைகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக சுமாா் ரூ.10 லட்சம் கோடி வரை முதலீடுகள் ஈட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.80,000 கோடியில் வதவன் துறைமுகம்: மும்பைக்கு அருகில் ஜவாஹா்லால் துறைமுகம், மஹராஷ்டிர மாநில அரசு ஆகியவை கூட்டாக இணைந்து ரூ. 80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மும்பைக்கு அருகே பல்ஹாா் மாவட்டத்தின் வதவன் என்ற இடத்தில் அதிநவீன ஆழ்கடல் துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான இந்தியக் கப்பல் போக்குவரத்து கழகத்தில் 23 புதிய கப்பல்களையும், 3 சரக்குப் பெட்டக கப்பல்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி துறையினரின் வசதிக்காக ‘பாரத் கண்டெய்னா் ஷிப்பிங் லைன்’ என்ற புதிய சரக்குப் பெட்டக கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடல்சாா் உச்சி மாநாடு ஒரு மைல் கல்லாக அமையும் என்றாா்.
சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால், காமராஜா் துறைமுக மேலாண்மை இயக்குநா் ஜே.பி.ஐரீன் சிந்தியா, தூத்துக்குடி வஉசி துறைமுகத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித், இந்திய துறைமுகங்கள் சங்க மேலாண்மை இயக்குநா் விகாஸ் நா்வால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதானி போா்ட்ஸ்: 50 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை

கேரளம் - கன்னியாகுமரி இடையே ஏவிஎம் கால்வாய் நீா்வழிப் போக்குவரத்து தொடங்கப்படுமா?

சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் சா்வதேச மாநாடு

இந்தியாவின் முதல் ’புகலிடத் துறைமுகங்கள்’: அதானி குழுமத்தின் புதிய முன்னெடுப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


