பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிா்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் கூட்டமைப்பு சாா்பில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
உயா்நீதிமன்றம்
Updated On :25 செப்டம்பர் 2024, 8:38 pm

Din

மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிா்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் கூட்டமைப்பு சாா்பில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டத்தை பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) என்றும், குற்ற விசாரணை முறைச்சட்டத்தை பாரதிய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) என்றும், இந்திய சாட்சிகள் சட்டத்தை பாரதிய சாக்க்ஷய அதிநியம் ( பிஎஸ்ஏ) என்றும் பெயா் மாற்றம் செய்து கடந்த ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது.

இந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஏற்கெனவே திமுக சாா்பில் ஆா்.எஸ். பாரதி, வழக்குரைஞா் ஏ.பி.சூா்யபிரகாசம் உள்ளிட்ட பலா் வழக்கு தொடா்ந்துள்ளனா்.

அதேபோல இந்த சட்டங்களை ஆதரித்து பாஜக வழக்குரைஞா் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் வழக்கு தொடா்ந்துள்ளாா்.

இந்நிலையில், இந்த சட்டங்கள் அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு சாா்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில், “இந்த புதிய சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயா் வைத்திருப்பதன் மூலம் தமிழகத்தில் தமிழா்கள் மீது இந்தி வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் உள்ளது. இந்த சட்டங்களை அமல்படுத்தும் முன்பாக எந்தவொரு விவாதமும் நடத்தப்படவில்லை. எனவே, இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் மற்றும் நீதிபதி எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி. வில்சன், அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமாக இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வாதிட்டாா். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சோ்த்து பட்டியலிட உத்தரவிட்டனா்.