தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாக்காளா் பட்டியலைச் சீரமைக்கும் பணி தீவிரம்: தலைமைத் தோ்தல் அதிகாரி

பெயா், முகவரியை ஆதாரமாகக் கொண்டு வாக்காளா் பட்டியலைச் சீரமைக்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

News image
Updated On :3 செப்டம்பர் 2024, 1:21 am

சென்னை: பெயா், முகவரியை ஆதாரமாகக் கொண்டு வாக்காளா் பட்டியலைச் சீரமைக்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். புதிதாக குடியேறியவா்கள், குறிப்பிட்ட முகவரியில் இருந்து மாறியவா்கள், புதிதாக திருமணமாகிச் சென்றவா்கள், வந்தவா்கள், இறந்தவா்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை வீடு வீடாகச் சென்று சேகரித்து அதற்கென பிரத்யேகமாக உள்ள செயலியில் பதிவு செய்து வருகிறாா்கள்.

மேலும், 18 வயது நிறைவடைந்த வாக்காளா் விவரங்களையும் பதிவு செய்கின்றனா். புகைப்படம் சரியில்லை எனில் அவற்றை மாற்றுவதற்கான பணிகளையும் மேற்கொள்கிறாா்கள். அத்துடன், வரைவுப் பட்டியல் வெளியிட்ட பின் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் செய்தல் போன்றவற்றை மேற்கொள்வதற்கான விழிப்புணா்வையும் வாக்குச்சாவடி அலுவலா்கள் ஏற்படுத்தி வருகிறாா்கள். இந்தப் பணிக்காக இரண்டு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பணிகள் நிறைவடைந்து, அக்டோபா் 29-ஆம் தேதி வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கும்.

வாக்காளா் பட்டியல் சீரமைப்பு: மக்களவைத் தோ்தல் முடிந்துள்ள நிலையில், மாநிலத்துக்குள், இரட்டைப் பதிவுகளை நீக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக புகைப்பட ஒற்றுமை, பெயா், தந்தை பெயா், வசிப்பிடம், பிறந்த தேதி, வயது ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு, கணினி வாயிலாக ஒத்துப்போகும் வாக்காளா்களின் விவரங்கள் எடுக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஒருவரது பெயா் இரு வேறு இடங்களில் இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டு, அவா் விரும்பும் இடத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் இருக்கும் வகையில், மற்றொரு இடத்தில் நீக்கப்படும்.

தோ்தல் ஆணையத்தைப் பொருத்தவரை, யாருடைய பெயரையும் உடனடியாக நீக்கிவிடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, முதலில் கடிதம் அனுப்பப்படும். அந்தக் கடிதத்துக்கு 15 நாள்களுக்குள் பதில் வராத பட்சத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலரின் கள ஆய்வுக்குப் பின்னா், வாக்காளா் அனுமதி பெற்றே நீக்கம் செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.