டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நாகை மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை!

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

News image
கோப்புப் படம்
Updated On :27 அக்டோபர் 2024, 4:13 am

DIN

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம்  அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து அக்.26  ஆம் தேதி காலை 8 மணி அளவில் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து சிலம்பு செல்வன் (38)

என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த குணா (40), செஞ்சி வேல் (45), வெங்கடேசன் (45), அலெக்ஸ் (28), சின்னப்பு (25), கார்த்தி (22), வளர் செல்வன் (40), ரகு (45), ரவி (50), மேகநாதன், புஷ்பவனத்தை சேர்ந்த மகேந்திரன், சாமுவேல் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர்.

பருத்தித்துறை வடகிழக்கு கடல் பகுதியில் சனிக்கிழமை (அக். 26) நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகுடன், 12 மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்து மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஞாயிற்றுக்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.