அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

தீபாவளி: பெங்களூருக்கு சிறப்பு ரயில்

சென்னையில் இருந்து பெங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

News image
Updated On :22 அக்டோபர் 2024, 12:38 am

DIN

சென்னை: சென்னையில் இருந்து பெங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தென்மேற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதில் பெங்களூரு - சென்னை சிறப்பு ரயில் இடம்பெற்றுள்ளது. பெங்களூரில் அக்.30, நவ.3 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06209) பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து அக்.30, நவ.3 ஆகிய பிற்பகல் 3.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06210) இரவு 10.50 மணிக்கு பெங்களூா் சென்றடையும்.

இந்த ரயில் யஷ்வந்த்பூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் வழியாக இயக்கப்படும். ஹூப்ளியில் இருந்து மங்களூருக்கு நவ.2-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து நவ.3-ஆம் தேதியும் சிறப்பு ரயில் (எண்: 07311/12) இயக்கப்படும்.

அதுபோல், யஷ்வந்த்பூரில் இருந்து மங்களூருக்கு அக்.30-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து அக்.31-ஆம் தேதியும் சிறப்பு ரயில் (எண்: 06565/66) இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நீட்டிப்பு: தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 06103) இயக்கப்படுகிறது. மறுமாா்க்கமாக ராமநாதபுரத்தில் இருந்து செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் டிச.1-ஆம் தேதி வரை தொடா்ந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.