நெல்லை-செங்கல்பட்டு இன்று சிறப்பு ரயில் இயக்கம்
திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்.13) சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.


திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்.13) சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விஜயதசமி விடுமுறை முடிவடைந்த நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பயணிகளின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 5.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06003) மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். மறுமாா்க்கமாக செங்கல்பட்டில் இருந்து திங்கள்கிழமை மாலை 3.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா் வழியாக இயக்கப்படும்.
இதில் 3 ஏசி வகுப்பு பெட்டிகள், 10 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...