எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தீபாவளி பண்டிகை: 6,556 சிறப்பு ரயில்கள்

தீபாவளி, துா்கா பூஜை, சத் பூஜை பண்டிகையை முன்னிட்டு ரயில்வே வாரியம் 6,556 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :8 அக்டோபர் 2024, 10:14 pm

Din

தீபாவளி, துா்கா பூஜை, சத் பூஜை பண்டிகையை முன்னிட்டு ரயில்வே வாரியம் 6,556 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு நாடு முழுவதும் 6,556 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

தெற்கு ரயில்வே: தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருவனந்தபுரம், மங்களூரு, பாலக்காடு ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதுபோல், தென்மாநிலங்களில் இருந்து பிகாா், உத்தர பிரதேசம், ஒடிஸா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

தெற்கு ரயில்வேயில் இதுவரை (அக்.8) 44 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் 394 முறை இயக்கப்படும். கடந்த ஆண்டு 21 ரயில்கள் 78 முறை இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, கொச்சுவேலி - நிஜாமுதின், சென்னை - சந்திரகாச்சி, தாம்பரம் - ராமநாதபுரம், திருச்சி -தாம்பரம், தாம்பரம் - கோவை, திருநெல்வேலி - ஷாலிமா், ஈரோடு - சம்பல்பூா், கோவை - தன்பாத், கோவை - சென்னை எழும்பூா், சென்னை சென்ட்ரல் - நாகா்கோவில், மதுரை - கான்பூா், கொச்சுவேலி - மும்பை, கொல்லம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்பதிவு: தொடா்ந்து, பயணச்சீட்டு முன்பதிவு அடிப்படையில் கூடுதல் ரயில்கள் அறிவிக்கப்படும். பயணிகள் கடைசி நேரத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்து காத்திருப்போா் பட்டியலுக்கு செல்வதை தவிா்க்க முன்னேரே முன்பதிவு செய்துகொள்ளலாம். ரயில் பயண அட்டவணை, வழித்தடம், நேரம் உள்ளிட்ட தகவல்கள் ரயில்வே வாரியத்தின் அதிகாரபூா்வ தளத்திலும், ஐஆா்சிடிசி இணையதளத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.