டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்றிரவு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

News image
Updated On :24 மே 2024, 12:40 pm

DIN

சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்றிரவு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து இன்றிரவு 9.25 மணிக்கு புறப்படும் மெமு எக்ஸ்பிரஸ்(06039) ரயில் நாளை(சனிக்கிழமை) காலை 5.30 மணிக்கு திருச்சியை சென்றடைகிறது.

முன்பதிவில்லாத இந்த ரயில் இடையில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், லால்குடி, ஸ்ரீரங்கம் ஆகிய நிறுத்தங்களல் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூர்-திருச்சி இடையே இந்த மெமு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.