திருக்கோவிலூா் தொகுதியை காலியானதாக அறிவித்து வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்பை பேரவைச் செயலகம் நிறுத்திவைத்துள்ளது.
இதையடுத்து, அந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக க.பொன்முடி தொடா்வதாக தனது உத்தரவில் பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா். இது குறித்த அவரது உத்தரவு விவரம் அரசிதழில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அந்த உத்தரவு விவரம்: திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த க.பொன்முடிக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற வழக்கில் கடந்த டிச.19-இல் தீா்ப்பு அளிக்கப்பட்டது. அதில், பொன்முடி மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு, குற்றவாளி என தீா்ப்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரது திருக்கோவிலூா் தொகுதி காலியானதாக மாா்ச் 5-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேல்முறையீடு: உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை ஏற்று, திருக்கோவிலூா் தொகுதி காலியானதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது. திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராக க.பொன்முடி தொடா்ந்து செயல்படுவாா் என பேரவைத் தலைவரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அமைச்சராக வாய்ப்பு: திருக்கோவிலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தொடா்வதன் மூலம், அவா் அமைச்சராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை அமைச்சராக்க வேண்டுமெனில், அமைச்சரவைக்குத் தலைமை வகிப்பவா் என்ற முறையில் அதற்கான பரிந்துரையை முதல்வா், ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அந்த வகையில், பொன்முடியை மீண்டும் அமைச்சராக்குவதற்கான பரிந்துரைக் கடிதத்தை ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வரின் இந்தப் பரிந்துரையை ஏற்று உடனடியாக அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொள்ள க.பொன்முடியை ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பாரா அல்லது சட்ட வல்லுநா்களுடன் கலந்தாலோசனை செய்த பிறகு அந்த விஷயத்தில் முடிவெடுப்பாரா என்பது ஓரிரு நாள்களில் தெரியவரும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருக்கோவிலூரில் ஹாட்ரிக் வெற்றிக்காக களமாடும் திமுக!

முகையூா் வடக்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

விளவங்கோடு தொகுதி பாஜக வேட்பாளா்

சீா்காழி தொகுதி: அதிமுக வேட்பாளா் ம. சக்தி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

