மாணவர்களுக்கு 2 கட்டங்களாக ஊக்கத்தொகை வழங்குகிறார் விஜய்!
இரு கட்டங்களாக மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க விஜய் முடிவு!


தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாணவர்களுக்கு இரு கட்டங்களாக ஊக்கத்தொகையினை நடிகர் விஜய் வழங்குகிறார்.
கடந்த ஆண்டு 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார்.
சுமார் 12 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி முழுவதும் விஜய் நின்றபடியே ஊக்கத்தொகையினை வழங்கினார்.
மேலும், அனைவருடனும் தனித்தனியாக நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இதனால் ஒருகட்டத்தில் அவர் சோர்ந்து போனதாகவும் தகவல் வெளியானது.
அதனால் இந்தாண்டும் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்துள்ள விஜய் அதனை இரு கட்டங்களாக வழங்க உள்ளார்.
அதன்படி முதல்கட்டமாக ஜூன் 28ல் கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும், 2ஆம் கட்டமாக ஜூலை 3ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஊக்கத்தொகையினை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...