தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஆம்ஸ்ட்ராங் கொலை: காவல் உதவி ஆய்வாளர் மகன் கைதானதன் பின்னணி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், காவல் உதவி ஆய்வாளரின் மகன் பிரதீப் கைதானதன் பின்னணி வெளியாகியுள்ளது.

News image

ஆம்ஸ்ட்ராங்(கோப்புப்படம்)

Updated On :27 ஜூலை 2024, 6:25 am

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப் என்பவர் கைது செய்யப்பட்டதன் பின்னணி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஆம்ஸ்ட்ராங்கை தொடர்ந்து நோட்டமிட்டு, அவர் சம்பவம் நடந்த பகுதிக்குள் வந்திருப்பதை, கொலை கும்பலுக்கு தெரிவித்து, வரவழைத்ததே பிரதீப்தான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 வழக்குரைஞா்கள் உள்பட 17 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்குத் தொடா்பாக தாம்பரம் மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ரெளடி சீசிங் ராஜா, சென்னை தண்டையாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த ரெளடி சம்பவம் செந்தில் ஆகிய 2 பேரையும் தனிப்படையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

இந்த வழக்குத் தொடா்பாக ரெளடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய உறவினா் பெரம்பூரைச் சோ்ந்த பிரதீப் (28) என்பவரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தனிப்படையினா் விசாரணை செய்தனா்.

விசாரணையின்போது, பிரதீப், ஆம்ஸ்ட்ராங் கொலையில் நேரடியாக ஈடுபட்ட கொலையாளிகளுக்கு உதவியது தெரியவந்தது.

குற்றவாளிகளுக்கு உதவியது தெரியவந்ததையடுத்து போலீஸாா், பிரதீப்பை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா் ஊா்க் காவல் படையில் சிறிது காலம் பணியாற்றியவர் என்பதும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் ஒவ்வொரு நாளும் எங்கெங்குச் செல்வார் என்பதையும், அவரது அன்றாட நடவடிக்கைகளையும் நோட்டமிட்டு கொலையாளிகளுக்கு பிரதீப்தான் தகவல் தெரிவித்ததாக போலீஸாா் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதீப்பின் தந்தை திருநாவுக்கரசு சென்னை காவல்துறையின் ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆற்காடு சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டபோது அவரது இறுதி சடங்கு முழுவதும் பிரதீப் இருந்துள்ளார் என்பதும் காவல்துறையினர் தற்போது நடத்திய விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.