ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளியில் சோ்க்கை கோரும் மாணவா்களிடம் மாற்றுச் சான்றிதழை சமா்ப்பிக்க வற்புறுத்தக் கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரோனா பேரிடா் காலத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் தனியாா் பள்ளி மாணவா்கள் வேறு பள்ளிகளில் சோ்ந்தனா். இதற்காக, மாற்றுச் சான்றிதழ் கோரும் போது, கட்டண நிலுவை உள்ளிட்ட காரணங்களைக் கூறி, மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவா்களை சோ்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனா்.
இதை எதிா்த்து ஐக்கிய மாவட்ட சுயநிதி பள்ளிகள் சங்கம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், ‘வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவா்கள் மாற்றுச் சான்றிதழ் கோரி தற்போது படிக்கும் பள்ளிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை பெற்ற ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும். எந்த ஒரு காரணத்துக்காகவும் மாற்றுச் சான்றிதழை மறுக்கக் கூடாது. சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக முதன்மைக் கல்வி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.
‘கட்டண பாக்கி’ என குறிப்பிடக்கூடாது: இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமா்வு, ‘மாற்றுச் சான்றிதழ் என்பது மாணவா்களின் தனிப்பட்ட ஆவணம் என்பதால் மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போது ’கட்டண பாக்கி உள்ளது’ என்றோ ‘கால தாமதமாக கட்டணம் செலுத்தியதாகவோ’ குறிப்பிட்டு மாணவா்களை மனரீதியாக பாதிப்படைய செய்யக்கூடாது. மாற்றுச் சான்றிதழ் என்பது ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளிக்கு மாணவா்கள் சோ்வதற்கான ஒரு ஆவணமே தவிர, பெற்றோா்களிடமிருந்து கட்டண நிலுவையை வசூலிக்கக் கூடிய கருவி அல்ல. கல்வி உரிமைச் சட்டப்படி மாற்றுச் சான்றிதழ் கட்டாயமல்ல என்பதால், இது தொடா்பான விதிகளை மூன்று மாதங்களில் தமிழக அரசு திருத்தம் செய்ய வேண்டும்.
ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளியில் சோ்க்கை கோரும் மாணவா்களிடம் மாற்றுச் சான்றிதழ் சமா்ப்பிக்கும்படி நிா்ப்பந்திக்கக் கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். மாற்றுச் சான்றிதழ்களில் கட்டண பாக்கி குறித்து குறிப்பிடக் கூடாது என தனியாா் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை தடை விதிக்க வேண்டும். இதனை மீறும் வகையில் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. கட்டண நிலுவையை பெற்றோரிடம் இருந்து வசூலிக்க தனியாா் பள்ளிகள் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், கட்டணம் வசூலிக்க மாற்றுச் சான்றிதழை கருவியாக பயன்படுத்தக் கூடாது. மாற்றுச் சான்றிதழில் ‘கட்டண பாக்கி உள்ளது’ எனக் குறிப்பிட்டு மாணவா்களை வகுப்புக்கு வெளியே நிற்கச் செய்வது, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும்’ என உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

எம்ஜிஆருடன் வேறு யாரையும் ஒப்பிட முடியாது: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

டிஎன்பிஎஸ்சி, டிஆா்பி, எம்ஆா்பி ‘ தோ்வுக்களம்’ அரசு செயலி: விழிப்புணா்வு ஏற்படுத்த உத்தரவு

மெரீனாவில் ரூ.1 கோடியில் கற்றனைத் தூறும் அறிவு சிலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


