நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பரில் விக்கிரவாண்டியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரியில் கட்சி தொடங்கினார். 2026 சட்டப்பேரவைத் தேர்தல்தான் இலக்கு என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார்.
கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடிகர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கட்சியின் முதல் மாநாடு வருகிற செப். 22 அல்லது 26 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இதற்காக விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் கட்சியின் தரப்பில் இருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக, விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த இரு ஆண்டுகளாக தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்புகளில் மாவட்டந்தோறும் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து உதவித்தொகை, பாராட்டுச் சான்றிதழ் அளித்து கௌரவித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்; விஜய் கண்டனம்!

கூட்டணியை நம்பி தவெக இல்லை: அருண்ராஜ்

சொல்லப் போனால்... விஜய்யின் அரசியல் களமும் சினிமா கால்ஷீட்டும்!

ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்: விஜய்
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

