டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நெல்லை-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லை-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 4:04 pm

DIN

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லை-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

நெல்லையில் இருந்து ஆக.13, 18 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கும், மறுமார்க்கத்தில் செல்பட்டில் இருந்து ஆக.14, 19ஆகிய தேதிகளில் மாலை 5.55 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதற்கான முன்பதிவு நாளை(ஆக.11) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இதேபோல் நாகர்கோவில்-தாம்பரம் இடையேயும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாகர்கோவிலில் இருந்து ஆக.18,25 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கும், மறுமார்க்கத்தில் தாம்பத்தில் இருந்து ஆக.19, 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதற்கான டிக்கெட் முன்பதிவும் நாளை(ஆக.11) காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.