2040 ஆம் ஆண்டுவாக்கில் கடல் மட்டத்தின் உயர்வு காரணமாக சென்னை மாநகரின் 7 சதவிகித நிலப்பரப்பு கடல் நீரில் அமிழ்ந்துவிடும் எனத் தெரியவந்துள்ளது.
`இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலோர நகரங்களுக்கான கடல் மட்ட உயர்வு மற்றும் கடல்நீர் புகுவது பற்றிய வரைபட’ அறிக்கையை ஆக. 1, வியாழக்கிழமை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரையிலிருந்து 15 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவற்றில் சென்னை மற்றும் மும்பை நகரங்களே முதன்மை நகரங்களாக பரிசீலிக்கப்பட்டுள்ளன.
ஆய்வறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 2040 ஆவது ஆண்டில் சென்னை பெருநகரப் பகுதியில் குறிப்பிட்ட பகுதிகள் 7.29 சதவிகிதம் (86.6 ச.கி.மீ.) வரையில் நீரில் மூழ்கும் என்றும், 2060 ஆவது ஆண்டில் 9.65 சதவிகிதம் (114.31 ச.கி.மீ.) ஆகவும், 2080 ஆவது ஆண்டில் 15.11 சதவிகிதம் (159.28 ச.கி.மீ.) ஆகவும், 2100 ஆவது ஆண்டில் 16.9 சதவிகிதம் (207.04 ச.கி.மீ.) ஆகவும் நீர்மூழ்கும் இந்தப் பரப்பு அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைப்படி, அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, தீவுத் திடல், அசோகச் சக்கர நினைவுச் சின்னம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் துறைமுகம் முதலான பகுதிகளில் கடல் மட்டம் உயரும் அபாயம் உள்ளது.
1987 முதல் 2021 வரையில் சென்னையில் கடல் மட்டம் 0.679 செ.மீ. உயர்ந்துள்ளதாகவும், வருடாந்திர உயர்வு 0.066 செ.மீ. என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் மும்பையில்தான் அதிகபட்ச கடல் மட்ட உயர்வு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள தொழிற்பேட்டைப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொள்ள உள்ளது.
அதிகரித்து வரும் நகரமயமாக்கல், கடற்கரையில் ஏற்படும் காலநிலை மாற்றங்களின் காரணமாக தாழ்வான கடலோர பகுதிகள் கடல் மட்ட உயர்வால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னையில் 3 மணி வரை 68.13% வாக்குப்பதிவு! தொகுதி வாரியாக நிலவரம்!

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தங்கம், வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு உயர்ந்தது?

தங்கம், வெள்ளி விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


