தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்று நீலகிரி ஸ்டார்ங் ரூம் (strong room) கேமரா திரை 20 நிமிடம் நின்று விட்டது. தொழில்நுட்ப கோளாறு என்கிறார்கள். இவ்வாறு தொழில்நுட்ப கோளாறுகள் வராமல பார்த்துக் கொள்ள வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பணியாக இருக்கிறது.
கால சூழ்நிலை என சொல்கிறார்கள், கால சூழ்நிலை வரும் என்பது குறித்து தெரியும், சேலம், நாமக்கலில் இல்லாத வெயில் இங்கொன்றும் இல்லை, எந்த காரணம் சொல்லாமல் 24 மணி நேரமும் தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றார்.
எந்தவித ஐயமும் இல்லாதபடி தேர்தல் ஆணையம் முறையாக பணி செய்ய வேண்டும் என்றவர், பல இடங்களில் வாக்காளர்கள் பெயர் விடுபட்டு உள்ளது. இதில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் வாக்காளர்களின் பெயர் விடுபட்டுள்ளது.
நீலகிரி, கோவை, தென் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நீக்கப்பட்டிருப்பது திமுகவின் தோல்வியை மறைப்பதற்காக அவர்கள் எங்களுடைய வாக்காளர்களை நீக்கி இருக்கிறார்கள் என்றார்.
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த காங்கிரஸின் குற்றச்சாட்டிற்கு பதிலத்த எல்.முருகன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எதுவும் செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் விளக்கி இருக்கிறது என்றும், உச்ச நீதிமன்றத்திலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டவர் காங்கிரஸின் இந்தியா கூட்டணியினர் தோல்வி பயத்தில் இதனை சொல்கிறார்கள் என்றார்.
அயோத்தியில் உள்ள மக்கள் ஒவ்வொருவருடைய எண்ணம் ராமர் கோயில் வேண்டும், 500 ஆண்டுகள் போராட்டம் முடிவுக்கு வந்து அங்கே தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது என்றவர் இந்தியர்களின் ஒவ்வொருவரின் கனவு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அனைவரும் சென்று வழிபடுகிறார்கள். ராமர் கோயில் வழிபாட்டுக்கு செல்லமாட்டேன் என ராகுல் கூறுவது எதை காட்டுகிறது என்றால் ராமரை வெறுக்கிறாரா? அல்லது இந்து மதத்தை வெறுக்கிறாரா? அல்லது கடவுள்களை வெறுக்கிறாரா? என்பதை தான் காட்டுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!
திமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

வாக்காளரின் பொறுப்பும், கடமையும்...
தேர்தல் அன்று...
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


