திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

மேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்கத்தில் 5 மணி நிலவரம்...

News image

வாக்குப்பதிவு - PTI

Updated On :23 ஏப்ரல் 2026, 12:10 pm

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி 89.93 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை முதல தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.

16 மாவட்டங்களில் உள்ள 152 சட்டப்பேரவைத் தொகுதிகளில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய வாக்குப்பதிவின்படி மாலை 5 மணி நிலவரத்தைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 3.60 கோடி வாக்காளர்களில் இதுவரை 89.33 சதவீதத்தினர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி,

அதிகபட்சமாக, தெற்கு தினாஜ்பூர் - 93.12%, கூச்பிஹார் - 92.07, பிர்பூம் - 91.55%, முர்சிதாபாத்தில் 91.36%, ஜல்பைகுறி - 91.20%, மேற்கு மேதினிபூரில் - 90.70%, ஜார்கிராம் - 81.04%, பாங்குரா - 89.91%, கிழக்கு மேதினிபூர் - 88.55%, மால்டாவில் - 89.56%, டார்ஜிலிங் - 86.49%, புருலியாவில் - 87.35% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இன்று காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள்.

முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

The Election Commission of India has stated that, as of 5 PM today, 89.93 percent of votes have been recorded in the state of West Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.