தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

News image
கோப்புப் படம்.
Updated On :20 ஏப்ரல் 2024, 3:36 pm

DIN

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சித்ரா பெளா்ணமி திருவிழா வரும் 23-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி திருவண்ணாமலைக்கு சுவாமி தரிசனம் செல்லும் பக்தா்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வரும் 22ம் தேதி 527 பேருந்துகளும், 23ம் தேதி 628 பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. மேலும், சென்னை மாதவரத்தில் இருந்து வரும் 22ம்தேதி 30 பேருந்துகளும், 23ம் தேதி 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 22ம் தேதி அன்று 910 பேருந்துகளும், 23ம் தேதி அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.