விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தீபாவளி: அரசு விரைவுப் பேருந்து முன்பதிவு தொடங்கியது!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகளில் பயணிப்போருக்கான முன்பதிவு புதன்கிழமை (அக்.11) காலை தொடங்கியது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:07 am

DIN


சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்து கழகங்கள் சார்பில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பேருந்துகளில் பயணிப்போருக்கான முன்பதிவு புதன்கிழமை (அக்.11) காலை தொடங்கியது.

பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ரம்ஜாக், பக்ரீத் போண்ற விடுமுரை நாள்களில் தமிழ்நாட்டில் பெருநகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு அதிகயளவில் மக்கள் சென்று வருவது வழக்கம். அவர்களின் வசதிக்காக வழக்கமான பேருந்துகளை விட சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. 

இதுபோன்று தெற்கு ரயில்வே சார்பிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிரம்பியது. 

இந்த ஆண்டு நவ.12-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

விரைவு பேருந்துகளை பொருத்தவரை 30 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய முடியும். 

அந்த வகையில், நவ.10-ஆம் தேதி பயணம் மேற்கொள்வோா் புதன்கிழமை (அக்.11) இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நவ.11-ஆம் தேதி பயணம் செய்வோருக்கான முன்பதிவு நாளை வியாழக்கிழமை (அக்.12) முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிறப்பு பேருந்துகளில் பயணிப்போருக்கான முன்பதிவு புதன்கிழமை (அக்.11) காலை தொடங்கியது. 

அரசு போக்குவரத்துக் கழகத்தின்  www.tnstc.in இணையதளம் அல்லது tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

இது தவிர, பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.