/

சுதந்திர தினம்: மநீம தலைவர் வாழ்த்து!

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மைய தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:08 pm

DIN

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மைய தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பான வெளியிட்ட அறிக்கையில், 

நமது தேசத்தின் 77-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கட்சி அலுவலகத்தில் காலை 10 மணியளவில், பொதுச்செயலாளர் ஆ.அருணாசலம் முன்னிலையில், துணைத்தலைவர் A.G.மௌரியா ஐபிஎஸ் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகை தந்தவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

சிறப்பாக நிகழ்ந்த இவ்விழாவில் நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் G.நாகராஜன், மாநில செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, முரளி அப்பாஸ், ராகேஷ் ராஜசேகரன், பிரதீப் குமார், சினேகா மோகன்தாஸ்,  தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மயில்வாகனன், ஜான்சன், மாநில துணைச் செயலாளர்கள் சண்முகராஜன், கபிலரசன்.

மாவட்ட செயலாளார்கள் ஓம் பிரகாஷ், வசந்த் சிங், மாறன், சண்முக சுந்தரம், தேசிங்கு ராஜன், உதய சந்திரன், சக்தி, ஸ்டான்லி மற்றும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.